‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூத்த அண்ணன் மூர்த்தி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூத்த அண்ணன் மூர்த்தி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூத்த அண்ணன் மூர்த்தி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூத்த அண்ணன் மூர்த்தி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு பரிட்சயம் ஆன பிரபலங்கள் மத்தியில் முக்கிய இடத்தில உள்ளவர் நடிகர் ஸ்டாலின் முத்து. இவரை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

ஸ்டாலின் முத்து:

சின்னத்திரையில் தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் சீரியல்களின் வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் அனைவரும் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளனர். அதில் 4 அண்ணன், தம்பிகள் ஒற்றுமையாக குடும்பத்தை அனுசரித்து செல்வது போல் கதை இருக்கும். அதில் மூத்த அண்ணன் மூர்த்தியாக குடும்பத்தை நெறிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் ஸ்டாலின் முத்து. இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் பாரதி ராஜாவின் அண்ணன் மகன்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

இவர் ஆரம்பத்தில் கலைஞர் டிவியில் தெக்கத்தி பொண்ணு என்ற கிராமத்து கதையில் கதாநாயகனாக நடித்தார். இதன் மூலம் அதிக கவனத்தை பெற்றார். இவர் டிசம்பர் 27ம் தேதி தேனி மாவட்டத்தில் பிறந்துள்ளார். ஸ்டாலின் 2006ம் ஆண்டு வந்த விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தான் இவரது அறிமுக தொடர். அதன் பிறகு சரவணன் மீனாட்சி முதல் சீசனில் தமிழ் என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான 7 c என்ற தொடரில் ஆசிரியராக நடித்துள்ளார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து தாமரை வெளியேறியது ஏன்? ஷாக் ரிப்போர்ட்!

அதன் பிறகு ஆண்டாள் அழகர் தொடரில் முக்கிய வேடமான சக்திவேல் என்பவராக நடித்துள்ளார். ஸ்டாலின் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சன் டிவியின் பாசமலர் தொடரில் பூவரசனாக நடித்துள்ளார். செங்காத்து பூமியிலேயே, கொம்பன், முத்துக்கு முத்தாக போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சத்தியமூர்த்தி என்று சொன்னால் தற்போது பலருக்கும் தெரியும் வகையும் பெரிய பிரபலமாக மாறியுள்ளார் ஸ்டாலின் முத்து.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!