விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து தாமரை வெளியேறியது ஏன்? ஷாக் ரிப்போர்ட்!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது இறுதி வாரம் நெருங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளர் தாமரை செல்வி வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்து உள்ளனர்.
தாமரை செல்வி:
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 4 சீசன்களை முடித்து 5வது சீசனில் அடி எடுத்து வைத்த போது அதிக எதிர்ப்பார்ப்புகள் நிலவி வந்தது. போட்டியாளர்கள் தேர்வு முதல் செட் அமைப்பு வரை அனைத்திலும் புது விதமாக இருந்தது. மேலும் இதுவரை நடக்காத வகையில் பல மாற்றங்கள் இந்த சீசனில் நடந்தது. இதனால் ரசிகர்களின் ஆர்வம் எகிற தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மிகவும் அமைதியாக மட்டும் பிக் பாஸ் வீடு இருந்து வந்ததால் பலருக்கும் போர் அடிக்க ஆரம்பித்தது. ஆனால் கமல் நேரடியாக குறிப்பிட்டு போட்டியாளர்களை ஊக்கமாக விளையாடும் படி அறிவுறுத்தினார்.
ஜனவரி 10 முதல் ஊரடங்குடன் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதன் பிறகு தான் பலரும் போட்டி களத்தில் குதித்து மும்முரமாக தங்களது விளையாட்டை தொடங்கினர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் என்றாலே என்ன என்று தெரியாமல் உள்ளே வந்து விட்டதாக கூறி அனைவரிடமும் டாஸ்க் பற்றி தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார் தாமரை. இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தாமரைக்கு ஒவ்வொரு டாஸ்க்கையும் எடுத்து சொல்லி தருவார்கள். அதன் மூலம் புரிந்து கொண்டு வேற லெவலில் களம் இறங்கி டாஸ்க் செய்வார் தாமரை. இவர் தெருக்கூத்து, மேடை நாடக கலைஞராக உள்ளவர். சாதாரண ஊடக துறையை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் வந்த தாமரைக்கு பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகி வந்தது.
சன் டிவி ‘சித்தி 3’ சீரியலில் பிரியங்கா, அபிஷேக் & தாமரை? ப்ரோமோ ரிலீஸ்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இந்நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கும் போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தாமரை தான் மக்கள் மத்தியில் குறைவான ஓட்டுகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த சில வாரங்களாக நிரூப்பிறகு சப்போர்ட் செய்து வந்தது, மக்களுக்கு பிடிக்காத காரணத்தால் தான் தாமரைக்கு ஓட்டுகள் குறைந்திருக்கிறது என்று பலரும் கூறிவருகின்றனர். தாமரை வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்