“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை மாற்றம், உண்மையை சொன்ன அபிநயா – ரசிகர்கள் ஷாக்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் முல்லை மாற்றம், உண்மையை சொன்ன அபிநயா - ரசிகர்கள் ஷாக்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை மாற்றம், உண்மையை சொன்ன அபிநயா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்டது குறித்து புகைப்படம் வெளியிட்ட அபிநயா அது பற்றி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா இறந்த பின் முல்லையாக யார் நடிப்பார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதன் பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா புதிய முல்லையாக களமிறங்கி இருக்கிறார். அவரை முதலில் முல்லையாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்த ரசிகர்கள் அதன் பின் விஜே சித்ரா சாயல் இருப்பதால் முல்லையாக ஏற்றுக் கொண்டு தற்போது ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற்ற விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசு கோரிக்கை!

இந்நிலையில் சமீபத்தில் முல்லை போலவே ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் வைரலானது. அதை பார்த்த பலர் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்டு இருப்பதாக வதந்திகளை கிளப்பினார்கள். அந்த புகைப்படங்களை வெளியிட்ட அபிநயா என்பவர் அது குறித்த விளக்கம் ஒன்றை அளித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் வெளியிட்ட புகைப்படங்களால் நீங்கள் முல்லையாக நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மீனாவின் காதல் தூது – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தால் அது முல்லை தானா என கேள்வி கேட்டு இருக்கிறார். நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறேன். ஆனால் அது வேற ஒரு கதாபாத்திரம். நானும் சித்து ரசிகர் தான், எனக்கும் முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பதால் எனக்கும் பிடிக்காமல் தான் இருக்கிறது. அதற்காக அவர் மீது நான் வெறுப்பை காட்ட கூடாது. என்னால் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என சொல்ல முடியவில்லை, அது சொன்னால் எனக்கு சீரியல் நிர்வாகத்திடம் பதில் சொல்ல வேண்டும். அதனால் என்னை திட்டாதீங்க என விளக்கம் அளித்து இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!