ஆடியில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசி எது தெரியுமா? லாபம் இரட்டிப்பாகும்… இந்த மாதம் இப்படி தான்!

0
ஆடியில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசி எது தெரியுமா? லாபம் இரட்டிப்பாகும்... இந்த மாதம் இப்படி தான்!
ஆடியில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசி எது தெரியுமா? லாபம் இரட்டிப்பாகும்... இந்த மாதம் இப்படி தான்!
ஆடியில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசி எது தெரியுமா? லாபம் இரட்டிப்பாகும்… இந்த மாதம் இப்படி தான்!

தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மிக முக்கிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான் கடக ராசியில் பயணம் செய்யவிருக்கிறார். அதனால் 12 ராசிக்காரர்களுக்கும் எண்ணற்ற மாற்றங்கள் நிகழவுள்ளது. ஆடி மாத ராசி பலன்களை இப்பதிவில் காண்போம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படும். காதல் வலையில் விழாமல் இருப்பது நல்லது. மேலும் வெளியூர் பயணங்கள் அமைய கூடும். அதனால் உங்களுக்கு நன்மையும் கிட்டும்.

ரிஷபம்:

இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி. பண வரவு அதிகரிக்கும் அதனை வைத்து ஆடம்பர செலவுகளையும் செய்வீங்க. அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நிறைவடையும் நேரம் இது.

மிதுனம்:

தொழில் ரீதியாக நீங்க கேட்ட உதவி கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வரலாம். அதனால் கவனமாக பேசுவது நல்லது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கடகம்:

கடக ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு தான் அதிர்ஷ்டம். உங்க காதலை உடனே போய் சொல்லுவீங்க.. அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் பங்கு சந்தையில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் பணவரவு உண்டு.

சிம்மம்:

ஆடி மாதம் முழுவதும் தொழில் தான் முழு கவனம் செலுத்துவீங்க அதனுடைய வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது உழைப்பீங்க. செங்கல், மணல் உள்ளிட்ட வியாபாரத்தில் இருபவர்களுக்கு நல்ல வருமானம் கிட்டும். தனியார் துறையில் வேலை பாக்குறவங்க கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கன்னி:

கலைத்துறையில் இருக்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் கொஞ்சம் சிரமங்கள் வரக்கூடும் அதனை தாண்டி தான் வரவேண்டும். குடும்பத்தில் கொஞ்சம் கவனமா இருங்க வேண்டும். இல்லையென்றால் வீண் சண்டைகள் வரும்.

துலாம்:

இந்த ஆடி மாதத்தில் உங்களுக்கு கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. அதே போல தொழில் விஷயத்திலும் பொறுமையா இருக்க வேண்டும். இந்த மாதம் பெண்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் – விஞ்ஞானிகள் முக்கிய கருத்து!

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே லாபத்திற்காக குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அது பலனை கொடுக்காது. எதிர்பாராத வகையில் சில நபர்களிடம் இருந்து உதவி கிட்டும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே கொஞ்சம் திட்டமிட்டு செலவு பண்ணுங்க அதே நேரம் வியாபாரத்தில் அதிக முதலீடு பண்ண வேண்டாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடக்கும். மேலும் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த புதிய கடையை திறக்கலாம்.

மகரம்:

உணவு சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதனை வைத்து புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடுமையாக முயற்சி செய்தால் அரசாங்க வேலை நிச்சயம் கிடைக்கும்.

கும்பம்:

இந்த மாதம் சொத்து விற்பனையில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி ஒரு முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருந்தால் லாபம் கிடைக்கும்.

மீனம்:

கல்யாணம் காய் கூடி வரும் அதனால் சில சுப செலவுகள் வர கூடும். அடுத்தவங்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். மாணவர்கள் திறமையாக படித்து பெற்றோர்களுக்கு பெருமையை சேர்ப்பார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!