ஆதார் அட்டையில் உங்களுடைய புகைப்படத்தை மாற்ற எவ்வளவு கட்டணம்? – முழு விவரம் இதோ!
இந்திய மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் பழைய போட்டோவை மாற்ற எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆதார் அட்டை:
மக்களுக்கு வங்கி கணக்கு திறப்பது முதல் சிம் கார்டு வாங்குவது வரை ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அதனால் அதில் உள்ள விவரங்கள் சரியாக இருப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அட்டை உங்களுடைய அடையாளத்தின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதனால் அதில் உள்ள புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுடைய புகைப்படத்தை எப்படி மாற்றுவது என பார்க்கலாம்.
மாதம் ரூ. 500 முதலீடு – ரூ. 44 லட்சம் வாபஸ் !! அருமையான சேமிப்பு திட்டம்!!
உங்களுடைய புகைப்படத்தை ஆன்லைன் மூலம் மாற்ற முடியாது. அதனால் புகைப்படம் மாற்றுவது சிரமமான ஒன்றாக இருக்கிறது. நீங்கள் புகைப்படத்தை மாற்ற அருகே உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். இதனை செய்ய உங்களிடம் 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். நீங்கள் ஆதார் மையத்திற்கு சென்று அங்கு புகைப்படத்தைப் புதுப்பிப்பது தொடர்பான படிவத்தை எடுக்க வேண்டும். அதில் உள்ள விவரங்களை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். பின் அங்கு இருக்கும் ஆபரேட்டர் உங்களுடைய புதிய புகைப்படத்தை எடுத்து புதுப்பிப்பு கோரிக்கை எண்ணுடன் ஒரு சீட்டை உருவாக்கி உங்களுக்குத் தருவார். புகைப்படம் புதுப்பிக்கப்பட்ட பிறகு, புதிய புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை uidai.gov.inல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.