SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 கடைசி நாள்!

0
SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - செப்.30 கடைசி நாள்!
SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - செப்.30 கடைசி நாள்!
SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 கடைசி நாள்!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் HDFC வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது பான் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில், இந்த சேவைகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஆதார் – பான் இணைப்பு

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்ததையடுத்து, அந்த சேவைகளை நிறைவேற்றி கொள்ள சில கால அவகாசத்தை கொடுத்தது. இதை தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியும் தனது வாடிக்கையாளர்கள் ஆதார் – பான் சேவைகளை செயல்படுத்தினால் மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என அறிவித்தது.

பெரியார் பிறந்த தினமான செப்.17ம் தேதி ‘சமூக நீதி’ நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு!

அந்த வகையில் SBI வாடிக்கையாளர்கள், பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு செயலற்றதாக மாறிவிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் மாதம் முதல் வங்கி பரிவர்த்தனைகளில் எந்தவித சிக்கல்களும் ஏற்படாமல் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் விவரங்களை விரைவில் இணைக்குமாறு HDFC வங்கியும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வாடிக்கையாளர்கள் தங்களது சிரமத்தை தவிர்ப்பதற்கும் மற்றும் தடையற்ற வங்கி சேவையை அனுபவிப்பதற்கும் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இல்லையென்றால் உங்கள் PAN எண் செயலற்றதாக மாறிவிடும். மேலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கணக்கை திறக்கும்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையில் பான் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு நாளைக்கு ரூ.50,000 க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், கடன் பத்திரங்கள் போன்றவற்றை வாங்கும் போதும் PAN விவரங்களை வழங்குவது அவசியம். அதனால் PAN அட்டைகள் செயலிழந்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வித்துறை!

இதற்கிடையில் வருமான வரி சட்டத்தில் 234H என்ற புதிய பிரிவை சேர்த்த மத்திய அரசு, கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்தவுடன் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கல்களை தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு,

  • முதலில் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
  • இப்போது இடதுபுறத்தில் உள்ள இணைப்பில் ஆதார் பிரிவை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை நிரப்ப வேண்டும்.
  • பிறகு அதில் கொடுக்கப்பட்ட CAPTCHA குறியீட்டை நிரப்பவும்.
  • ‘ஆதார் இணைப்பு’ விருப்பத்தை சொடுக்கவும்.
  • இப்போது உங்கள் பான்-ஆதார் இணைப்பு செயல்முறை முடிந்தது.
  • உங்கள் ஆதார் விவரங்களில் உள்ள பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை வருமான வரித்துறை சரிபார்த்த பிறகு இணைப்பு வெற்றிகரமாக முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!