ஆதார் அட்டையில் வீட்டிலிருந்தே அப்டேட் செய்ய முடியுமா? – எப்படினு தெரிஞ்சுக்கலாம்!

0
ஆதார் அட்டையில் வீட்டிலிருந்தே அப்டேட் செய்ய முடியுமா? - எப்படினு தெரிஞ்சுக்கலாம்!

ஆதார் அட்டையில் செய்யப்படும் மாற்றங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றை வீட்டில் செய்து கொள்ள முடியும் என்று தெரிய வந்துள்ளது.

ஆதார் அப்டேட்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது நாட்டின் அனைத்து ஆதார் அட்டைதாரர்களும் தங்களது ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்காக நேரடியாக ஆதார் மையத்திற்கு மக்கள் செல்ல வேண்டி இருக்கும். ஆனால் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் அலுவலகப் பணியை மேற்கொள்பவர்கள் இதற்காக அதிக நேரத்தை செலவிட முடியாது. இதற்கான சிரமத்தை  தவிர்க்கும் வகையில் ஒரு புதிய மாற்று வழி சேவை தபால் துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையை பெறுவதற்காக  https://ippbonline.com/web/ippb/ippb-customers என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் அதில் டோர் ஸ்டெப் பேங்கிங் சர்வீஸ் ரெக்வஸ்ட் ஃபார்ம் என்பதை ஓபன் செய்து, ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான விவரங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின் படி மாற்றிக் கொள்ள முடியும். இறுதியில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்து சப்மிட் பட்டனை கொடுத்தால் உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும். இதன் பிறகு தபால்காரர் வீட்டிற்கு வந்து உங்கள் பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்து கொண்டு உங்களது அப்டேட் விவரங்களை மாற்றி தருவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!