ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? வீட்டில் இருந்து பண்ணலாம்!! Simple Steps இதோ!

0
ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? வீட்டில் இருந்து பண்ணலாம்!! Simple Steps இதோ!
ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? வீட்டில் இருந்து பண்ணலாம்!! Simple Steps இதோ!
ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? வீட்டில் இருந்து பண்ணலாம்!! Simple Steps இதோ!

இந்தியாவில் அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் இதிலுள்ள விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறான விவரங்கள் இருப்பின் வீட்டில் இருந்தவாறு நீங்கள் புதுப்பிக்கலாம்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பயன்பாடுகளுக்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் இதில் இடம் பெற்றிருக்கும் விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதன்படி ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மற்ற ஆவணங்களில் உள்ள விவரங்களுடன் ஒத்திருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் நீங்கள் வீட்டில் இருந்தபடியே புதுப்பித்து கொள்ளலாம். ஆதாரில் உங்களின் பெயரை 2 முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். இதே போல் உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை (DOB) ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க இயலும். அத்துடன் உங்களின் பாலினத்தையும் ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். அதனால் ஒருமுறை புதுப்பிக்கும் போது சரியாக புதுப்பித்து கொள்ளவும்.

இனி இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது – தமிழகத்தில் புதிய நடைமுறை அமல்!

Follow our Instagram for more Latest Updates

இதனை புதுப்பித்து கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

1. இதற்கு முதலில் https://www.uidai.gov.in/. என்ற UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. இதில் ‘My Aadhaar’ என்பதை கிளிக் செய்து ‘Update Your Aadhaar’ என்பதை தேர்வு செய்யவும்.

3. அதில் ‘update demographics data online’ என்பதை கிளிக் செய்யவும்.

4. அடுத்ததாக ‘Proceed to update Aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தற்போது ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டவைகளை சரியாக பதிவிட வேண்டும்.

5. இதையடுத்து ‘Send OTP’ என்பதை கிளிக் செய்தவுடன் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ‘OTP’ எண் அனுப்பப்படும்.

6. இப்போது ‘OTP’ எண்ணை உள்ளிட்டு ‘Update Demographics Data’ என்பதை கிளிக் செய்யவும்.

7. இதனை தொடர்ந்து நீங்கள் புதுப்பிக்க வேண்டிய தகவல்களை பதிவு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

8. இறுதியாக நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் பணம் செலுத்தியதும் ஆதாரில் தகவல்கள் புதுப்பிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!