EPF கணக்கில் பிறந்த தேதியை மாற்ற ஆதார் கார்டு மட்டும் போதும் – புதிய அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி..!

0
EPF கணக்கில் பிறந்த தேதியை மாற்ற ஆதார் கார்டு மட்டும் போதும்
EPF கணக்கில் பிறந்த தேதியை மாற்ற ஆதார் கார்டு மட்டும் போதும்

EPF கணக்கில் பிறந்த தேதியை மாற்ற ஆதார் கார்டு மட்டும் போதும் – புதிய அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி..!

இந்தியாவில் ஊழியர்களுக்கு என தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மூலம் ஓய்வு பெறும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் உடன் அவர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்பு பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இது மிகவும் பயனுள்ள திட்டமாகும்.

புதுப்புது திட்டங்கள்:

EPF நிறுவனம் புதுப்புது சலுகைகளை அறிவித்து மக்களுக்கு அதன் வசதிகளை எளிமையாக்கி உள்ளது. இதனால் மக்களுக்கும் நிறுவனம் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸால் ஊழியர்கள் தங்கள் PF பணத்தை எடுப்பதற்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியாவில் இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா

அதன்படி பிஎஃப் நிதியில் இருந்து 75% தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பிஎஃப் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க வசதியாக புதிய வழிகாட்டி ஒன்றும் வழங்கப்பட்டது.

தற்போது புதிதாக பிஎஃப் ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு ஆதார் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது. மேலும் ஆதார் மற்றும் பிஎஃப் ஆவணங்களில் உள்ள பிறந்த தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 3 ஆண்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த திருத்தம் செய்ய பிஎஃப் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!