10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி – இடைநிலை கல்வி வாரியம் அறிவிப்பு!!
ஜம்மு-காஷ்மீர் இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 2021 ஏப்ரல் 1 முதல் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
பொதுத்தேர்வுகள் தேதி:
ஜம்மு-காஷ்மீர் இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 3 முதல் தொடங்கி ஏப்ரல் 24 ஆம் தேதியுடன் முடிவடையும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பாசிரியர்கள் தேர்வில் தமிழ்வழி ஒதுக்கீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!!
மேலும் அரசின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து மாணவர்களும் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் அனைத்து தேர்வு மையங்களும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படும். 2020 டிசம்பர் 31 ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை அறிவித்த பின்னர், நாடு முழுவதும் பல மாநிலங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாரிய தேர்வு தேதிகளை அறிவிக்க தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!
பீகார், ஒடிசா, உத்தரகண்ட், திரிபுரா, மற்றும் பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வாரிய தேர்வு தேதிகளை அறிவித்துள்ளன. இத்தேர்வுகள் காரணமாக, பெரும்பாலான மாநிலங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்