புத்தாண்டை முன்னிட்டு உயர்ந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களாக மாற்றமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கம் விலையானது எதிர்பாராத உச்சத்தை நெருங்கிவிட்டது. கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்ததால் மக்கள் சற்று நிம்மதியில் இருந்தனர். ஆனால் இன்று (ஜன. 2) புது வருட பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது நேற்றைய விலையை விட கிராமிற்கு ரூ. 10 அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ. 5920க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1500 ரொக்கம் – அரசிடம் கோரிக்கை!
அதே போல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6390க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 51120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 80.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 80300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.