வாட்ஸ்அப் கணக்கை iPad டுடன் இணைக்க முடிவு – புதிய அப்டேட் வெளியீடு!
WhatsApp கணக்கை Android இல் வாடிக்கையாளர்கள் தங்களது iPad டுடன் இணைத்துக் கொள்ளும்படியான புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தனது பயனாளர்களுக்காக பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் மட்டுமல்லாமல் பாதுகாப்பு கருதியும் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில், வாட்ஸ்அப் செயலியை ஒருவர் மட்டுமே தங்களது மொபைலில் லாகின் செய்திருக்க முடியும் மற்றும் கணினியில்இணைப்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம்.
தமிழகத்தில் இ சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும் – வலுக்கும் கோரிக்கை!
ஆனால், ஒரே வாட்ஸ்அப் செயலியை 4 பேர் வரைக்கும் தங்களது மொபைல் மூலமாக ஒரே நேரத்தில் பயன்படுத்தும் படியான அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது வாட்ஸ்அப் செயலியை இணைப்பது தொடர்பான மற்றொரு அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, WhatsApp கணக்கை Android இல் வாடிக்கையாளர்கள் தங்கள் iPad டுடன் இணைத்துக்கொள்ளும்படியான அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது.