நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2023
நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 05 மே 2023

தேசிய செய்திகள்

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்திற்குநவரத்னாஅந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  • ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) நிறுவனத்திற்குநவரத்னாஅந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. RVNL நிறுவனத்திற்கு செப்டம்பர் 2013 இல்மினிரத்னாஅந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  • RVNL க்குநவரத்னாஅந்தஸ்து வழங்குவதன் மூலம் அதிகாரங்களின் மேம்பட்ட பிரதிநிதித்துவம் மற்றும் அதிக செயல்பாட்டு சுதந்திரம் மற்றும் நிதி சுயாட்சிக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவிற்கு 161வது இடம்.
  • 2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 180 நாடுகளில் 161வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • RSF(Reporters Without Borders) அமைப்பானது உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டது மற்றும் இதில் 180 நாடுகளில் பத்திரிகையின் நிலையை மதிப்பிடுகிறதுமேலும் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக, நார்வே ஆனது இந்த குறியீட்டில் 1வது இடத்தைப்  வருகிறது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்தியா அடுத்த ஆண்டு முதல் தனது நாட்டின் சொந்த வெப்பக் குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியா அதன் மக்கள்தொகை வெப்பத்தின் தாக்கத்தை அளவிடுவதற்கும், குறிப்பிட்ட இடங்களுக்கு வெப்ப தாக்கம் சார்ந்த வெப்ப அலை எச்சரிக்கைகளை உருவாக்குவதற்கும் அடுத்த ஆண்டு முதல் இனி ஒவ்வோராண்டும் நாட்டின் சொந்த வெப்ப குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த குறியீட்டின் மூலம் ஒரு பகுதி உண்மையில் எவ்வளவு வெப்பமாக உணர்கிறது என கணக்கிட முடியும் மற்றும் காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த குறியீட்டை தீர்மானிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

2023ம் ஆண்டிற்க்கான முதல் சூறாவளிக்குமோச்சா புயல்என்று பெயர் வைக்கப்பட்டது.
  • மோச்சா புயலானது செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள யேமன் நாட்டின் துறைமுக நகரமான மோச்சாவிலிருந்து (அல்லது மோக்கா) உருவான காரணத்தால்  “மோச்சா புயல்என பெயர் வர காரணமாயிற்று.
  • மோச்சா நகரமானது காபி வர்த்தகத்திற்கும், நீண்ட காலமாக புகழ்பெற்ற மோச்சா காபிக்கும்  நன்கு அறியப்பட்ட நகரமாகும். உலக வானிலை அமைப்பு (WMO) வழங்கிய ஆணையின்படி இந்த சூறாவளிக்கு மோச்சா புயல் என பெயர் பெயரிடப்பட்டது,

மாலத்தீவு கடலோர காவல்படைக்கான இந்திய துறைமுகத்திற்கு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
  • மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல்படைஏகதா துறைமுகத்திற்குஇந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவருடன் மாலத்தீவு பிரதமர் மரியா தீதி ஆகியோர் அடிக்கல் நாட்டினார்.
  • கடந்த 11 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஒருவர் தீவு நாட்டிற்கு வருவது என்பது, இதுவே  முதல் முறை என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

UAE அரசாங்கமானது  ‘இயந்திரங்கள் 2023  பார்க்க முடியும்தலைப்பில் தனது உச்சிமாநாட்டைத் தொடங்கியுள்ளது.
  • AI இன் எதிர்காலம் குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள், அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கை உருவாக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பார்வைக்கு பங்களிக்கும் திறனைப் பற்றி விவாதிப்பதையும் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களை ஒன்றிணைப்பதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை மற்றும் துபாய் ஃபியூச்சர் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது இதில் குற்பியிடத்தக்கது.

மூன்று ஈரானிய பெண் ஊடகவியலாளர்களுக்கு பத்திரிகை சுதந்திரத்துக்கான .நா.வின் உயரிய விருது வழங்கப்பட்டது.
  • ஈரானில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பெண் ஊடகவியலாளர்களுக்கு, உண்மை மற்றும் பொறுப்பு அர்ப்பணிப்புக்காக இந்த ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரத்திற்கான .நா.வின் உயரிய விருது வழங்கப்பட்டது.
  • யுனெஸ்கோவின் உலகப் பத்திரிகை சுதந்திரப் பரிசானது 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட கொலம்பிய பத்திரிகையாளரான கில்லர்மோ கானோ அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு முதல், உலக பத்திரிகை சுதந்திர தினத்துடன் இணைந்து ஆண்டுதோறும் மே 3 அன்று வழங்கப்படுகிறது.
NTPC வங்காளதேசத்தில் அனல் மின் நிலையத்தை தொடங்கி, அதன் முதல் வெளிநாட்டு திறன் மையத்தை  திறந்துள்ளது.
  • NTPC குழுவானது சமீபத்தில் வங்காளதேசத்தின் பாகர்ஹாட், மோங்லா, ராம்பால் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 1320 மெகாவாட் (2×660) மைத்ரீ சூப்பர் அனல் மின்நிலையத்தில் (MSTPP) 660 மெகாவாட் திறன் கொண்ட யூனிட்-1 தனது குழுவில் சேர்த்துள்ளது.
  • இந்த புதிய சேர்த்தலின் மூலம் NTPC-யின் நிறுவப்பட்ட திறனானது 72304 மெகாவாட்டாக உயர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

உணவு பொருள்கள் கடத்தலை தடுக்கவும், தரமான உணவு பொருள்களை வழங்கவும் தமிழகத்தில் முதல் முறையாக க்யூ ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் உணவு பொருள்கள் கடத்தலை தடுக்கவும், தரமான உணவு பொருள்களை வழங்கவும் முதல் முறையாக க்யூ ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பால்கொலா நியாய விலை கடையில் இலவசமாக சிறுதானியங்களை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவர்களின் வணிகங்களைப் பெருக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசு, ரூ.10,006 கோடியை SRI நிதிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்த நிதிகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு மூலதனத்தை வழங்குவதில் இந்த திட்டமானது கவனம் செலுத்துகிறது.

நியமனங்கள்

உலக  வங்கியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்தஅஜய் பங்காநியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் 25 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவானது மே 03 அன்று, முன்னாள் மாஸ்டர்கார்டு(மாஸ்டர்கார்டு என்பது உலகளவில் இரண்டாவது பெரிய கட்டணச் செயலாக்க நிறுவனமாகும்) தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்காயை ஐந்தாண்டு காலத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.
  • 63 வயதான பங்கா, பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அமெரிக்காவானது முதல் RSV தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது(FDA), GSK இன் சுவாச ஒத்திசைவு வைரசுக்கான RSV முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது குறிப்பாக வயதானவர்களுக்கு ஆபத்தான ஒரு பொதுவான சுவாச பாதிப்பாக விளங்கும் வைரசுக்கு எதிராக முதல் தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தடுப்பூசி மூலம் வயதானவர்கள் எளிதல் பாதிக்கப்படும் சுவாச நோயிலிருந்து சுலபமாக மீள முடியும் என GSK நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கரடி ரோமத்திலிருந்து வீரியம் மிக்க மருந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
  • சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் சிலாத் எனப்படும் கரடிகளின் ரோமத்தில்ஆன்டிபையாட்டிக் பாக்டீரியாக்கள்இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
  • இந்த வகை கரடிகள் பெரும்பாலும் மத்திய அமெரிக்காவிலுள்ள கோஸ்டா ரிக்கோ கடற்கரைகளில் அதிகமாக வாழும் என அறிவிக்கப்படுகிறது.

முக்கிய தினம்
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் மே 4 அன்று தீயணைப்பு வீரர்கள் ஆற்றிய மகத்தான பணியை கௌரவிப்பதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் (IFFD)அனுசரிக்கப்படுகிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!