தங்கம் விலை: 2 நாளில் ரூ.1240 உயர்வு… இன்று ரூ.45 ஆயிரத்தை தாண்டியது விலை – ஷாக்கில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக விலை உயர்ந்து, ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் விலை ரூ.45 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருந்த நிலையில், இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 1,240 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.520 என அதிரடியாக உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனையானது.
10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கு முந்தைய டிப்ஸ் இதோ!
இந்த நிலையில் இன்று, தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.720 என தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 45,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல் கிராமுக்கு ரூ.90 என உயர்ந்து 5,690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து வெள்ளியின் விலையும் எதிர்பாராத அளவுக்கு அதிரடி உயர்வை கண்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி கிலோவுக்கு ரூ.2,900 என அதிரடியாக உயர்ந்து ரூ.80,700 என விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று, கிராமுக்கு ரூ.2.90 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70க்கு விற்பனையாகிறது.
Exams Daily Mobile App Download