தங்க நகைகளுக்கு Hall Mark கட்டாயம் – ஏப்.01 முதல் புதிய நடைமுறை அமல்! மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் தங்கத்தால் ஆன நகைகளுக்கு 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் :
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு எப்போதும் அதிகமாகவே உள்ளது. தற்போது தங்கம் வாங்குவது சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. இந்தியத் தர நிர்ணய அமைப்பு தங்கத்தின் தரம் மற்றும் விலையை மதிப்பீடு செய்து ஹால்மார்க் குறியீட்டை வழங்குகிறது. இந்த ஹால்மார்க் எண் உள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என பிஐஎஸ் அறிவித்துள்ளது. அதன் படி இன்று (ஏப்.01) முதல் அனைத்து தங்க நகைக்கும் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
WhatsApp: நீங்கள் Community Announcement Groupsல் இருப்பவரா? இனி மெசேஜ் படிக்க ஈஸியா இருக்கும்!
மேலும் மக்கள் இதற்கு முன் வாங்கியுள்ள 4 முத்திரையுடன் கூடிய பழைய ஹால்மார்க் நகைகள் செல்லுபடியாகும் என்று மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்தால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.