LIC AAO 300 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.53600/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள்
Assistant Administrative Officers (AAO) (Generalist) பணியிடங்களை நிரப்ப இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த பதவிக்கு என மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
LIC AAO வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Current Year – 277 பணியிடங்கள் மற்றும் Backlog – 23 பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- மேற்கண்ட பணிக்கு Preliminary Examination, Main Examination மற்றும் Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.53600/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
LIC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.