RBI வேலைவாய்ப்பு 2023 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம்!
மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.02.2023க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RBI |
பணியின் பெயர் | மருத்துவ ஆலோசகர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
RBI காலிப்பணியிடங்கள்:
மருத்துவ ஆலோசகர் எனப்படும் Medical Consultant (MC) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
MC வயது வரம்பு:
விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை!!
Follow our Instagram for more Latest Updates
Medical Consultant ஊதியம்:
ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.
RBI வங்கி தேர்வு செயல் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.