ரூ.34,800/- ஊதியத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
Assistant Manager / Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.34,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Railway Catering And Tourism Corporation Limited |
பணியின் பெயர் | Assistant Manager / Manager |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
IRCTC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager / Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கல்வி தகுதி:
RBSS Cadre-ல் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IRCTC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Follow our Instagram for more Latest Updates
ரயில்வே ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9300/- முதல் ரூ.34,800/- வரை ஊதியமாக வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCTC தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Deputation) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.