டிச.18 தமிழக அமைச்சரவை கூட்டம் – முதல்வர் ஸ்டாலின் தலைமை!
தமிழக அரசு அடிக்கடி முக்கிய ஆலோசனைகளுக்காக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி வரும் நிலையில், டிசம்பர் 18ம் தேதியான நாளைமறுநாள் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளுடன் பதவியேற்ற நிலையில், அவை அனைத்தையும் தகுந்த முறையில் நிறைவேற்ற உளது வருகிறது. மேலும், அரசு திட்டங்கள் அணைத்தும் வாய்மொழியாக இல்லாமல் செயலாக்கப்பட வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகிறது. தமிழக அரசு துறை வாரியாக பலவேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இளநிலை நீட் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – CENTAC தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றத்தால், அவரின் தமிழக அமைச்சர் பதவி மற்றும் பிற துறைகள் குறித்த விவாதம் நடக்க உள்ளது. இதற்காக நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.