நடப்பு நிகழ்வுகள் – 11 டிசம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் – 11 டிசம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் – 11 டிசம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 11 டிசம்பர் 2022

தேசிய செய்திகள்  

தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா 2022

  • தேசிய நீதித் துறை நியமன ஆணையத்தின் மூலமாக உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தனிநபா் மசோதாவை மார்க்சிஸ்ட்  உறுப்பினா் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்ய மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
  • ‘தேசிய நீதித்துறை நியமன ஆணையம்’ பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘பழங்குடியினர் திருத்த மசோதா சட்டம்’ மக்களவையில் அறிமுகம்

  • குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினா் பட்டியலில் புதிதாக சோ்ப்பது, சில மாற்றங்களை மேற்கொள்வது என்ற அடிப்படையில் 4 மாநிலங்களில் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலைத் திருத்துவதற்கான 4 மசோதாக்கள் மக்களவையில் டிசம்பர் 9, 2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டன.
  • தமிழகம், கா்நாடகம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கான பழங்குடியினா் திருத்த மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
    • தமிழகத்தில் நரிக்குறவா், குருவிக்காரா் சமூகங்கள்
    • ஹிமாசலில் ஹாட்டீ சமூகத்தினா்,
    • சத்தீஸ்கரின் பின்ஜியா சமூகத்தினா்,
    • கா்நாடகத்தின் பெட்டா-குருபா சமூகத்தினா்

 

சர்வதேச செய்திகள்

அதிநவீன போர் விமானம் அமைக்க மூன்று நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்

  • குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்’ என்று பெயரிடப்பட்டுள்ள அதிநவீன போர் விமானத்தை பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து வடிமைக்க முடிவு செய்துள்ளன.
  • புதிதாக உருவாக்கப்படும் இந்த போர் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும், மேலும் ஆளில்லா விமானங்கள்,அதிநவீன சென்சார்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படவுள்ளது.

கென்ய பள்ளிகளில் மதிய உணவு திட்டம் தொடங்க முடிவு

  • இந்தியாவில் செயல்படும் மதிய உணவு திட்டம் பற்றி அறிந்து கொண்டு அவற்றை தங்களது நாட்டில் அமல்படுத்தும் நோக்கில் கென்யா நாட்டில் இருந்து குழு ஒன்று வருகை தந்துள்ளது.
  • இந்திய அரசின் பிரதம மந்திரி போஷான் திட்டத்துடன் இணைந்து செயல்படும் அக்சய பத்ரா என்ற பலன் சாரா இந்திய அமைப்பின் நடவடிக்கைகளை கற்று கொண்டு, அவற்றை ஆப்பிரிக்காவில் பள்ளி கூடங்களில் அமல்படுத்த இக்குழு திட்டமிட்டுள்ளது.
  • இந்த குழுவில் அந்நாட்டின்
    • நைரோபி நகர துணை கவர்னர் ஜேம்ஸ் ஜோரோஜ் முசிரி,
    • தலைமை கல்வி அதிகாரி ரூத் ஆவுவர் மற்றும்
    • நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் துறை இயக்குனர் ஜாய்ஸ் கின்யான்ஜூய் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்கள் வருகை தந்தனர்.

TiE உலகளாவிய  உச்சிமாநாட்டின் 7வது பதிப்பு – 2022

  • TiE (The Indus Entrepreneurs), தொழில்முனைவோர்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச அளவில் முக்கிய இலாப நோக்கற்ற அமைப்பான (NPO) TiE உலகளாவிய உச்சிமாநாட்டை, 2022 டிசம்பர் 12 முதல் 14 வரை ஹைதராபாத்தில் நடத்தவுள்ளது.
  • இந்த உச்சிமாநாடு உலகளாவிய தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான யோசனைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

 

மாநில செய்திகள்

தெலுங்கானாவில் (டிஆா்எஸ்) கட்சியின் பெயா், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) என அதிகார பூர்வமாக பெயர் மாற்றம்

  • தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியின் பெயா், பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) என்று மாற்றப்பட்டதற்கு இந்திய தோ்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கும் போராட்டங்களுக்காக, கடந்த 2001-இல் டிஆா்எஸ் கட்சியை சந்திரசேகா் ராவ் தொடங்கினார்.

இந்தியாவின் முதல் கார்பன் நியூட்ரல் பண்ணை கேரளாவில் அமைந்துள்ளது

  • கேரள முதல்வர் பினராயி விஜயன், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள மாநில விதைப் பண்ணையை நாட்டிலேயே முதல் கார்பன்-நியூட்ரல் பண்ணையாக அறிவித்தார்.
  • இந்த அறிவிப்பு ஒரு தசாப்த கால நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதில் முற்றிலும் இயற்கை விவசாய நடவடிக்கைகள் மற்றும் பண்ணையில் மண் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான அறிவியல் தலையீடுகள் ஆகியவை அடங்கும்.
    • 2025 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 40 சதவீத ஆற்றல் தேவைகளை அடைய கேரளா அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

27வது திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா

  • திருவனந்தபுரத்திலுள்ள நிஷாகாந்தி அரங்கத்தில் சர்வதேச திரைப்பட விழாவை கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார்.
  • டிசம்பர் 9 முதல் டிசம்பர் 16ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 186 சினிமாக்கள் திரையிடப்படுகின்றன.

கோவாவில் மோபா சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது

  • கோவாவில் அமைக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 11,2022 அன்று திறந்து வைக்கவிருக்கிறார்.
  • மேலும் 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற போது நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ஆக இருந்தது, ஆனால் அது தற்போது 140 ஆக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாக்பூரில் ஐசிஎம்ஆர்(ICMR) வசதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • பிரதமர் நரேந்திர மோடி 2022 டிசம்பர் 11 அன்று நாக்பூரில் ஒரு ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் ஹீமோகுளோபினோபதியின் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைக்கிறார்.
  • பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சேவை செய்ய சுகாதார ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் நாட்டின் முயற்சிகளை விரைவுபடுத்த இந்த நிறுவனங்கள் உதவும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திப்பு சுல்தான் தொடங்கிய சலாம் ஆரத்தி-யை கர்நாடக அரசு  பெயர் மாற்றம் செய்துள்ளது

  • ‘சலாம் ஆரத்தி’ சடங்கு மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தான் காலத்தில் தொடங்கப்பட்டது. மைசூர் சாம்ராஜ்யத்தின் நலனுக்காக திப்பு வழிபாடு செய்வார்.
  • முன்பு அரசு நிர்வாகத்தின் நலனுக்காக நடத்தப்பட்ட சடங்கு, இனி மக்கள் நலனுக்காக நடத்தப்படும். இப்போது, இந்த சடங்கு ‘நமஸ்காரம்’ என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • தற்போது கர்நாடகாவில் புத்தூர், சுப்ரமண்யா, கொல்லூர், மேல்கோட் மற்றும் பிற இந்து கோவில்களில் இந்த சடங்கு தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

  • இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரக் குழுவின் தலைவராக இருந்த சுக்விந்தர் சிங் சுகு அடுத்த முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடவுன் எம்.எல்.ஏ.வான 58 வயதான சுகுவின் பெயரை உயர்மட்ட பதவிக்கு கட்சி மேலிடம் அனுமதித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய முதல்வர் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

விருதுகள்

ஆஸ்திரேலியாவின் மதிப்புமிக்க டான் விருது 2022

  • முன்னாள் ஆஸ்திரேலிய தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக 2022- ஆண்டுக்கான டான் விருதைப் பெற்றுள்ளார்.
  • ஒலிம்பிக் தடை வீரர் சாலி பியர்சன் மற்றும் துருவ வால்டர் ஸ்டீவ் ஹூக்கர் ஆகியோருக்குப் பிறகு, இரண்டு முறை விருதை வென்ற மூன்றாவது தடகள வீராங்கனை இவர் ஆவார், இந்த விருது ஆஸ்திரேலியாவின் மற்றும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சர் டான் பிராட்மேனின் பெயரால் அழைக்கப்படுகிறது.

 

முக்கிய தினம்

சர்வதேச மலை தினம்

  • நன்னீர், சுத்தமான ஆற்றல், உணவு மற்றும் பொழுதுபோக்குகளை வழங்குவதில் மலைகள் வகிக்கும் பங்கைப் பற்றி குழந்தைகளுக்கும் மக்களுக்கும் கற்பிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலை தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2022 -ம் ஆண்டுக்கான அன்றைய தினத்தின் கருப்பொருளாக   “Women Move Mountains”.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!