மீண்டும் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் களமிறங்கும் நடிகர் ஜிபி முத்து – வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் மட்டுமே இருந்தாலும் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் ஜிபி முத்து. தற்போது விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
ஜிபி முத்து;
தமிழ் சின்னத்திரையில் திறமையால் முன்னேறியவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் யுடியூபில் தன்னுடைய நகைச்சுவை குணத்தால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்து, அதன் பின் தற்போது படங்களிலும், சின்னத்திரையிலும் கலக்கி வருபவர் ஜிபி முத்து. அவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக களமிறங்கினார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி ஒரே வாரத்தில், என்னால் குடும்பத்தை விட்டு இருக்க முடியாது என சொல்லி வெளியேறினார்.
Follow our Instagram for more Latest Updates
அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும், பணம், புகழ் எதுவும் வேண்டாம் குடும்பம் தான் முக்கியம் என்ற அவருடைய குணத்திற்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். அதன் பின் பல நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஜிபி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் மீண்டும் கலந்து கொள்ள இருக்கிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையை பாராட்டிய பிரபலம் – அவரே பகிர்ந்த தகவல்!
Exams Daily Mobile App Download
அதாவது மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான அண்டாகாகசம் நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறார் ஜிபி முத்து. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து உடன் ஷெரினா, குயின்சி, சாந்தி மாஸ்டர், ரேஷ்மா, ஐக்கி பெர்ரி ஆகியோர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.