சூட்டோடு சூடாக பிரபல சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜிபி முத்து.. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு வாரம் மட்டுமே இருந்தாலும் ஏகப்பட்ட மக்களின் மனதை கவர்ந்தவர் ஜிபி முத்து. அவர் தற்போது பிரபல சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருப்பது போல படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது
ஜிபி முத்து:
சமூக வலைத்தளங்களில் டிக்டாக் செயலி மூலமாக ஏகப்பட்ட குடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது. ஆனால் அந்த செயலி மூலமாக பிரபலமடைந்தவர் ஜிபி முத்து. அவர் தற்போது யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி பிரபலமானவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக அவர் ஏகப்பட்ட மக்களின் மனதை கவர்ந்தார். ஒரு வாரம் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வரும் பெயர், புகழ், பணம் தேவை இல்லை எனக்கு.. என் குழந்தைகள் தான் முக்கியம் என சொல்லி அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பலரது பாராட்டுகளை பெற்றது.
சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடந்த அதிசயம்.. ஆஹா.. இந்த சீனுக்கு தான காத்துகிட்டு இருந்தோம்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஜிபி முத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவருடைய படம் குறித்த சில ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் விஜய் டிவியில் பிரபலமான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் சிறப்பு ரோலில் நடிக்க இருக்கிறார். நேற்று படப்பிடிப்பு தலத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாமானிய மக்களில் ஒருவராக இருந்து, தன்னுடைய திறமையால் தற்போது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கும் ஜிபி முத்துவிற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.