JioMart-யில் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி ஷாப்பிங்? முழு விவரம் இதோ!
இந்தியாவில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் செயலில் புது புது அட்வான்ஸ் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜியோ நிறுவனம் வாட்ஸ் அப் செயலியில் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ நிறுவனம்:
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் மக்கள் விரும்பக் கூடிய வகையில் பரிமாற்ற வசதிகள் இருப்பதால் அதிக அளவில் இந்த சேவை பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த ஆப் ல் புதிய புதிய அப்டேட்கள் அந்நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தகவல் பரிமாற்ற சேவையில் இந்த வாட்ஸ் ஆப் சேவை முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் மேலும் ஒரு புதிய வசதியினை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சேவையில் முதலிடம் வகிக்கும் ஜியோ நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த சேவையின் மூலம் மெட்டா மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இணைந்து எண்ட்-டு-எண்ட் வாட்ஸ்அப் ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சேவை மூலம் ஜியோமார்ட் பொருட்கள் அனைத்தையும் சாட் மூலம் எளிமையாக வாங்க முடியும் ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள JioMart on WhatsApp சேவை மூலம் பயனர்கள் ஜியோமார்ட் இல் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். மேலும் இந்த சேவையில் பணம் செலுத்துவது என அனைத்தும் வாட்ஸ்அப் மூலமாகவே செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
ஜியோ மார்ட்டின் மூலம் பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய 7977079770 என்ற எண்ணிற்கு Hi என்று குறுந்தகவல் அனுப்ப வேண்டும். அதன்பின்பு உங்களுக்கு பிடித்த ஜியோமார்ட் பொருட்களை நீங்கள் வாட்ஸ் அப்பில் வாங்க முடியும். மேலும் இந்த ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. முதற்கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் இந்த 5ஜி சேவை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜியோ கொண்டு வரும் 5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்