RailTel நிறுவனத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க தயாரா?

0
RailTel நிறுவனத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?
RailTel நிறுவனத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா?
RailTel நிறுவனத்தில் தேர்வில்லாத பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க தயாரா?

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Additional General Manager / Jt. General Manager (Mktg) பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 09.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, தேர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RailTel Corporation of India Limited (RailTel)
பணியின் பெயர் Additional General Manager / Jt. General Manager (Mktg)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RailTel) Additional General Manager / Jt. General Manager (Mktg) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

RailTel வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும்.

RailTel அனுபவ விவரம்:

Additional General Manager பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Selection Grade Officer பதவியில் Level 13 என்ற ஊதிய அளவின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

Jt. General Manager (Mktg) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் JAG With GAZ Service பதவியில் Level 12 என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 10 ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

RailTel ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி, திறமை மற்றும் முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

RailTel தேர்வு முறை:

இந்த RailTel நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RailTel விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (09.09.2022) வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!