மத்திய அரசில் அலுவலக உதவியாளர் வேலை – ICSI நிறுவனத்தில் Online விண்ணப்பங்கள் வரவேற்பு!
ICSI இன்ஸ்டிடியூட் ஆஃப் திவால்நிலை வல்லுநர்கள் (ICSI IIP) அமைப்பில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Managing Director, Executive, Assistant, Office Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ICSI Institute of Insolvency Professionals (ICSI IIP) |
பணியின் பெயர் | Managing Director, Executive, Assistant, Office Assistant |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICSI IIP Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:
வெளியான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, இன்ஸ்டிடியூட் ஆஃப் திவால்நிலை வல்லுநர்கள் (ICSI IIP) அமைப்பில் Managing Director, Executive, Assistant, Office Assistant பணிக்கென தலா ஒருத்தி பணியிடங்கள் வீதம் மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
ICSI IIP Recruitment 2022 தகுதி & அனுபவ விவரங்கள்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் கீழுள்ளவாறு கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
- Managing Director பணிக்கு The Institute of Company Secretaries of India அல்லது The Institute of Chartered Accountants of India அல்லது The Institute of Cost Accountants of India ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் Member ஆக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் Company Secretary யில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
- Executive பணிக்கு Post Graduate டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் The Institute of Company Secretaries of India அல்லது The Institute of Chartered Accountants of India அல்லது The Institute of Cost Accountants of India ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் Member ஆக இருக்க வேண்டும்.
- Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் Commerce பாடப்பிரிவில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ICSI IIP Recruitment 2022 வயது விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Managing Director பணிக்கு 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Executive பணிக்கு 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Assistant பணிக்கு 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Office Assistant பணிக்கு 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ICSI IIP Recruitment 2022 ஊதிய விவரம்:
இந்த மத்திய அரசு பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படுவோர் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
- Managing Director பணிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.30 லட்சம் பெறுவார்கள்.
- Executive பணிக்கு Level 8 அளவின் படி, குறைந்தது ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- Assistant பணிக்கு Level 4 அளவின் படி, குறைந்தது ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- Office Assistant பணிக்கு Level 8 அளவின் படி, குறைந்தது ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
ICSI IIP Recruitment 2022 தேர்வு முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ICSI IIP Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ online விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.