SBI SCO 2022 வேலைவாய்ப்பு – காலியிடங்கள், தகுதி & விண்ணப்பக் கட்டணம் விளக்கம்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
வேலை வாய்ப்புகள்
இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வங்கியில் காலியாக இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா 3ம் அலைப்பரவலின் வேகம் குறைந்திருக்கும் இந்த சூழலில் பல்வேறு தொழில்துறை நிறுவனங்களில் இருந்து புதிய வேலை வாய்ப்புகளும், ஆட்சேர்ப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வங்கித் துறை நிறுவனங்கள் பலவும் புதிய பட்டதாரிகளுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளது.
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி நாள்!
அந்த வகையில் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்போது, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு தேவையான தகுதி, காலியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை காண்போம்.
SBI SCO ஆட்சேர்ப்பு 2022:
காலியிட விவரங்கள்:
- தலைமை தகவல் அதிகாரி – 1 பதவி
- தலைமை தொழில்நுட்ப அதிகாரி – 1 பதவி
- துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்) – 1 பதவி
- துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (கோர் பேங்கிங்) – 1 பதவி
தகுதி:
தலைமை தகவல் அதிகாரி: விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது பொருத்தமான துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க இருக்க வேண்டும். இதில் MBA கூடுதல் அளவுகோலாக இருக்கும்.
தலைமை தொழில்நுட்ப அதிகாரி: விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொருத்தமான துறையில் MBA படித்திருக்க வேண்டும்.
துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்): விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொருத்தமான துறையில் MBA பட்டப் படிப்பை பெற்றிருக்கலாம்.
துணை தலைமை தொழில்நுட்ப அதிகாரி (கோர் பேங்கிங்): விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய துறையில் MBA பட்டமும் ஏற்றதாக இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது/EWS பிரிவுகளுக்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் SC/ST/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.