BEL நிறுவனத்தில் மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Trainee Publication Officer-I பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 02.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) |
பணியின் பெயர் | Trainee Publication Officer-I |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BEL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trainee Publication Officer-I பணிக்கென 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
BEL கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BEL வயது வரம்பு:
01.02.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BEL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
BEL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண், முன்னனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BEL விண்ணப்ப கட்டணம்:
OBC/ SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்றவர்கள் – ரூ.200/-
BEL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 02.03.2022ம் தேதிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.