‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி ஸ்டாலினுக்கு நடந்த அடுத்த சோகம் – மாமியார் மரணம்! ரசிகர்கள் ஆறுதல்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணனாக மூர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஸ்டாலினின் மாமியார் தற்போது மரணமடைந்திருப்பதாக அவர் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஸ்டாலின்
தமிழ் சின்னத்திரையில் முக்கியமான சீரியல்களில் ஒன்றாக கருதப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இல், குடும்பத்தின் மூத்த அண்ணனாக மூர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின். இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் 3 தம்பிகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து கொடுத்து, அன்பையும், பாசத்தையும் பொழியும் ஒரு சிறந்த அண்ணனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் ஸ்டாலினுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
“பாரதி கண்ணம்மா” அருணுடன் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை – வைரலாகும் புகைப்படம்!
எந்தவொரு கதாப்பாத்திரம் கொடுத்தாலும் யதார்த்த நடிப்பை கொடுத்து வரும் நடிகர் ஸ்டாலினுக்கு 7C, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று தந்திருக்கிறது. தற்போது, விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் ஸ்டாலினுக்கு, மக்கள் மத்தியில் சிறந்த அண்ணன் என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Cooku With Comali Season 3 | Promo 1 – கோமாளிகளை வெளுக்கும் குக்குகள்!
இப்படி இருக்க கடந்த வாரத்தில் நடிகர் ஸ்டாலினின் பெரியம்மா ராஜம்மாள் என்பவர் மரணமடைந்த விஷயத்தை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட அவருக்கு ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மீண்டுமாக நடிகர் ஸ்டாலின் வீட்டில் அடுத்த மரணம் ஒன்று சம்பவித்திருக்கிறது. அதாவது நடிகர் ஸ்டாலினின் மனைவியின் அம்மா சந்தனப்பிள்ளை என்பவர் நேற்று (பிப்.16) காலமாகி இருக்கிறார். தொடர்ந்து ஒரே வாரத்தில் 2 இறப்புகளை கண்டிருக்கும், நடிகர் ஸ்டாலினின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.