TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1-ல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு பிப்.12ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் வெளியாகி இருக்கிறது.
ஹால் டிக்கெட் வெளியீடு:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் பல அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 போன்ற பணிகளுக்கான காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதி வெளியாகி இருக்கிறது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான 31 சதவீத அகவிலைப்படி உயர்வு எப்போது? அரசுக்கு கோரிக்கை!
அதன் படி இந்த தேர்வுகள் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலும், 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் என 2 அட்டவணைகளில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் விண்ணப்பத்தார்கள் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் நுழைவு சீட்டினை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு மையத்திற்கு எடுத்து செல்வதோடு, அதனுடன் அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் முழு ஊரடங்கு? அரசின் அதிரடி முடிவு!
ஏற்கனவே இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மாவட்ட அளவில் ஹால்டிக்கெட்டும், அதனைத்தொடர்ந்து தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மைய ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதல்கட்ட தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியாகி இருக்கிறது.