தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்றைய எபிசோடில் பல அதிரடி திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. தற்போது வெண்பா தூக்கு மாட்டிக் கொள்வது போல வீடியோ ஒன்று வெளியானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் ட்விஸ்ட்:
பாரதி கண்ணம்மா சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்க போகிறது. பாரதி மனம் திருந்தி கண்ணம்மாவுடன் வாழ தயாராக இருக்க, ஆனால் கண்ணம்மா நான் தவறு செய்தேன் இது என்னுடைய குழந்தை இல்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். ஆனால் கண்ணம்மா பாரதியிடம் சண்டை போடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கண்ணம்மா எதுவும் பேசாமல் கை எடுத்து கும்பிட்டு விட்டு கிளம்புகிறார்.
அதனால் சௌந்தர்யா பாரதியை திட்ட அடுத்து என்ன நடக்கும் என கதை சென்று கொண்டிருக்கிறது. இத்தனை நடக்கும் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் வெண்பா ஜெயிலில் இருந்து வெளியே வந்து எதுவும் செய்யாமல் இருப்பதால் இனி வரும் எபிசோடுகளில் அவருடைய ஆட்டம் ஆரம்பிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியான வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
அதில் வெண்பா தூக்கிட்டு தற்கொலை செய்வது போல காட்டப்பட்டுள்ளது. அதனால் வெண்பா இறந்து விடுவாரா? பாரதி கண்ணம்மா சீரியல் முடியப் போகிறதா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை வெண்பாவை மாயாண்டி அல்லது சாந்தி காப்பாற்றி பாரதி கண்ணம்மா சேரவில்லை என்ற உண்மையை சொல்லி விடுவார்கள். அதன் பின் வெண்பா சந்தோசப்பட இருக்கிறார். அதுவே அடுத்த எபிசோடுகளில் காட்டப்படும்.