‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக அறிமுகமாகும் நடிகை சைத்ரா ரெட்டி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினாவுக்கு பதிலாக ‘யாரடி நீ மோகினி’ பிரபலம் சைத்ரா ரெட்டி நடிக்க இருப்பதை போல வெளியான ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
தற்போது பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில அதிரடியான அடுத்தகட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் பாரதிக்கு, கண்ணம்மா மீதுள்ள வெறுப்பு, கோபம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வர அதற்கேற்றார் போல சாமியாரின் வார்த்தைகளும் கண்ணம்மா குறித்த உண்மையை தெரிந்து கொள்ள பாரதியை தூண்டி இருக்கிறது. ஆனால், என்ன நடந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து வரும் பாரதி நேற்றைய எபிசோடில் கண்ணம்மாவின் வீட்டை விட்டு கிளம்பு முற்படுகிறார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா யார் தெரியுமா? வியப்பளிக்கும் தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!
இதற்கு பிறகு பாரதி எடுக்கப்போகும் அந்த முக்கிய முடிவு என்ன என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஜெயிலில் இருந்து திரும்பி வந்திருக்கும் வெண்பா, கண்ணம்மா மீதான எந்தவித ஆக்ஷன் வேளைகளிலும் இறங்காமல் இதுவரை பொறுமை காத்து வருகிறார். அதனால் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம் வில்லி வெண்பாவின் தலையீடு இல்லாமல் சற்றே போரடிக்க துவங்கி இருக்கிறது.
சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து பின்னணி பற்றி நிபுணர்கள் சொல்வது இதுதான்? அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா கதாப்பாத்திரத்தில் நடிகை பரினாவுக்கு பதிலாக ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ பிரபலம் சைத்ரா ரெட்டி நடிக்க இருப்பதை போல எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் வில்லி ஸ்வேதாவாக நடித்திருந்த நடிகை சைத்ரா ரெட்டி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெண்பாவாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சில காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பிடித்திருக்கிறது. இது நடைபெறுவதற்கு எவ்விதமான வாய்ப்புகள் இல்லை என்றாலும், ‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவாக சைத்ரா ரெட்டி நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.