விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா யார் தெரியுமா? வியப்பளிக்கும் தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா யார் தெரியுமா? வியப்பளிக்கும் தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா யார் தெரியுமா? வியப்பளிக்கும் தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா யார் தெரியுமா? வியப்பளிக்கும் தகவல்கள்! ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ் குமார் பற்றிய உண்மை தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் தற்போது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.

ஹேமா ராஜ்குமார்:

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. இவரை அனைவரும் ஹேமா என்றும் கயல் என்றும் அழைக்கின்றனர். ஹேமா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பிறந்துள்ளார். தற்போது ஹேமாவிற்கு 30 வயதாகியுள்ளது. இவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆனால் நடிப்பின் காரணமாக தற்போது சென்னையில் தான் வசித்து வருகிறார். இவரது அப்பா பெயர் ராஜ் குமார், அம்மா அமுதா. இவர் தனது பள்ளி படிப்பை செயின்ட் பால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்துள்ளார்.

சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து பின்னணி பற்றி நிபுணர்கள் சொல்வது இதுதான்? அதிர்ச்சி தகவல்!

AVC கல்லூரியில் MCA படிப்பை முடித்துள்ளார். ஹேமாவின் கணவர் பெயர் சதீஷ். ஹேமா 5 அடி உயரமும், 51 கிலோ உடல் எடையும் கொண்டிருக்கிறார். ஹேமா திரைப்படங்கள், சீரியல்களில் நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளர் பணிகளை செய்து வருகிறார். இவர் 2014ம் ஆண்டு முதல் நடிப்பு துறையில் இருக்கிறார். ஹேமா விஜய் டிவி, சன் டிவி மற்றும் பெப்பர்ஸ் டிவி போன்றவற்றில் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியின் ஆபீஸ், சின்னத்தம்பி, சன்டிவியில் பொன் ஊஞ்சல், தென்றல், குல தெய்வம், விதி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ அருண், ஆல்யா மனசா இணையும் ரோஜா சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

ஹேமா பாயும் புலி, வீரய்யன், ஆறாது சினம், இவர் யாரென்று தெரிகிறதா, சவரக்கத்தி, ஷைத்தான் கீ பட்சா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹேமாவிற்கு மியூசிக் கேட்பது தான் பொழுது போக்காக உள்ளது. வாலிபால் ஆட்டம் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். ஹிந்தி பாப் என்ற இசை வகையும் ரொம்ப பிடிக்குமாம். ஹேமாவிற்கு இட்டாலியன் வகை உணவுகள் தான் அதிகம் பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இவர் பல வேடங்களில் இதுவரை நடித்துள்ள போதிலும், தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் அதிக புகழை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!