தனுஷின் வடசென்னை பட நடிகர் சூர்யகாந்த் கொரோனாவால் உயிரிழப்பு – ரசிகர்கள் இரங்கல்!
தமிழ் திரையுலகில் 1980களில் இருந்து தற்போது வரை ஒரு குணச்சித்திர நடிகராக மக்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகர் சூர்யகாந்த் கொரோனா தொற்று காரணமாக காலமாகி இருக்கிறார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மரணம்
இந்தியா முழுவதையும் ஆட்டிப் படைத்து கொண்டிருக்க கூடிய கொரோனா வைரஸ் தொற்று பல ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒரு சாதாரண தொழிலாளி முதல் உயர் பதவியில் இருப்பவர்கள், பிரபலமானவர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காத இந்த கொரோனா தொற்று பலரது உயிரை பறித்துள்ளது. இது தவிர தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா 3ம் அலையால் வடிவேலு முதல் திரிஷா வரை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை மாற்றம், உண்மையை சொன்ன அபிநயா – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக, வில்லனாக, குணச்சித்திர வேடமேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூர்யகாந்த் கொரோனவால் காலமாகி இருக்கிறார். 1860ம் ஆண்டு பிறந்த இவர் 1981ல் தனது சினிமா பணியை துவங்கியுள்ளார். அந்த வகையில் 1981ம் ஆண்டு முதல் வசந்த காலம், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, புதுயுகம், அம்மன் கோவில் கிழக்காலே, நான் சிவப்பு மனிதன், கிழக்கு சீமையிலே, நாடோடி மன்னன், மீண்டும் சாவித்ரி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யகாந்த்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மீனாவின் காதல் தூது – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
தவிர இன்றைய கால கட்ட ரசிகர்களின் விருப்பத்திக்கேற்ற பாய்ஸ், சிங்கம், காலா, கைதி, காக்கி சட்டை, வடசென்னை, சங்கத்தமிழன் ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யகாந்த் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அன்னாரது இந்த திடீர் மரணம் தமிழ் திரையுலகை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், மறைந்த நடிகருக்கு ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.