தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரேஷன் கார்டை ஆன்லைன் மூலம் எளிதாக பெறலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் மத்திய, மாநில அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை மாதந்தோறும் பெற்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று நிலவிய இக்கட்டான சூழலில் மத்திய மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். தற்போது புலம் பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பல மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதனால் வெளி மாநிலத்தவர்கள் தங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடைகளிலேயே பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு அரசு வழங்கிய Study Material – பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது இருப்பிட சான்றாகவும் ரேஷன் கார்டு ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். முன்பெல்லாம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு அதிக கால வியரமும் ஆகும். தற்போது எளிதாக வீட்டில் இருந்த படியே உரிய ஆவணங்களை கொண்டு ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
- https://www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் தோன்றும் படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். பிறகு ஆதார், பான், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும்.
- அடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் விவரம், எரிவாயு இணைப்பு விவரம் போன்றவைகளை பதிவிட வேண்டும்.
- அனைத்து நடைமுறைகளையும் முடித்த பிறகு Reference எண் கிடைக்கும். அப்போது உங்கள் விண்ணப்பதிவு உறுதி செய்யப்படும்.
- உங்கள் விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து உங்கள் ரேஷன் கார்டை வீட்டிற்கு டெலிவரி செய்வார்கள்.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்