![சன் டிவி சன் டிவி](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/12/சன்-டிவி-3.jpg)
சன் டிவி “ரோஜா” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 1000வது எபிசோட் கொண்டாட்டம்! ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவியில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றான “ரோஜா” சீரியல் குழுவினர் தற்போது மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதாவது சீரியல் குழுவினர் 1000வது எபிசோடை கொண்டாடி வருகின்றனர்.
ரோஜா சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பல புதிய தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், சன் டிவி சீரியல்களுக்கு மவுசு குறையாமல் இருக்கிறது. அந்த வகையில் முன்னணி சீரியல்களில் ஒன்று தான் ரோஜா சீரியல், இந்த சீரியல் தொடங்கப்பட்டு பல திருப்பங்கள், அதிரடி காட்சிகள், சஸ்பென்ஸ் காட்சிகள் என பல வந்துள்ளது. காரணம் சீரியல் தொடங்கி இதுவரை 2, 3 கதையாசிரியர்கள் மாறி உள்ளனர்.
Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?
இந்த சீரியல் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளை சொல்லலாம். பல எபிசோடுகளை தாண்டி நம்பர் 1 இடத்தில் இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு நடித்து வருகிறார். மேலும் வில்லியாக முதலில் ஷாமிலி நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். அதன் பின் சீரியலில் விஜே அக்ஷரா நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அர்ஜுன் பாட்டியாக முன்னணி நடிகை வடிவுக்கரசி நடித்து வருகிறார். பல நட்சத்திர பட்டாளங்களை கொண்ட சீரியல் குழுவினர் தற்போது உச்சகட்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த சீரியல் 1000வது எபிசோடை அடைந்துள்ளது. இருந்தாலும் இந்த சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் சீரியலின் முதல் வெற்றியாக இருக்கிறது. இதனால் ரோஜா சீரியல் ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.