ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்த ‘சத்யா’ நடிகை ஆயிஷா – மெகா சங்கம எபிசோடு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் சிறப்பு மெகா சங்கம எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இத்தொடரில் இந்த வாரம் ‘சத்யா’ சீரியலில் இருந்து ரவுடி பேபியாக நடிகை ஆயிஷா களமிறங்கி இருக்கிறார். இந்த காட்சிகள் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
செம்பருத்தி சீரியல்
தமிழ் சின்னத்திரை சேனல்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலில் சமீப காலமாக சிறப்பு மெகா சங்கம எபிசோடுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. எப்போதும் TRP ரேட்டிங்கில் டாப் இடத்தை பெற்றுவரும் இந்த ‘செம்பருத்தி’ சீரியல் நடிகர் கார்த்திக் ராஜின் விலகலுக்கு பிறகு சற்றே சரிவை கண்டு வந்தது. அதனால் இழந்த ரசிகர்களை மீண்டும் கவரும் வண்ணமாக இந்த சீரியல் குழு சில யுக்திகளை கையாண்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது 1,200 எபிசோடுகளை கடந்து பயணித்து கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலில் கடந்த மாதத்தில் இருந்து சிறப்பு மெகா சங்கம எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதாவது இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கு இருக்கும் நவக்கிரக தோஷத்தை நீக்குவதற்காக ஆதியின் வீட்டை விட்டு வெளியேறிய பார்வதி சில பூஜைகளை செய்து வருகிறார். இப்போது இந்த நவக்கிரக தோஷத்தால் அகிலாண்டேஸ்வரிக்கு பல பிரச்சனைகள் எழுந்து வர அவை எல்லாவற்றிலும் இருந்து பார்வதி அவரை காப்பாற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஆதி சில வில்லன்களால் தாக்கப்பட அவரை கவனிப்பதற்காக பார்வதி புதிய வேடமிட்டு அகிலாண்டேஸ்வரியின் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இப்போது இந்த குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும் விதத்தில் பார்வதிக்கு உதவி செய்வதற்காக ஜீ தமிழ் சீரியல்களின் நாயகிகள் அம்மனாக அவதாரம் எடுத்து வருகின்றனர். இந்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் இதுவரை ‘திருமதி ஹிட்லர்’ ஹாசினி, ‘புதுப்புது அர்த்தங்கள்’ பவித்ரா என பலரும் அம்மனாக அவதாரம் எடுதுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது ‘சத்யா 2’ சீரியலில் இருந்து சத்யா அம்மனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில் வில்லன்களால் கடத்தப்படும் பார்வதிக்கு உதவி செய்வதற்காக, ரவுடி பேபி சத்யாவாக ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்திருக்கிறார் நடிகை ஆயிஷா. ஏற்கனவே ‘சத்யா 2’ சீரியலில் ரவுடி பேபியாக கலக்கி வரும் ஆயிஷா ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்திருப்பதால் இதில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்