Home news தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி தற்போது உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம் அறிக்கை:

தற்போது வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அநேக இடங்களில் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி அந்தந்த மாவட்டங்கள் அதிகம் மழை பெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் நிலவிய ஜாவத் புயல் கொல்கத்தா அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்து சென்றது. இதனால் தற்போது அங்கு வறண்ட வானிலை நிலவுகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 – அரசுக்கு கோரிக்கை!

ஆனால் இன்னும் மேலடுக்கு சுழற்சியானது தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நீடித்து வருகிறது. ஆதலால் திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அத்துடன் 270 மிமீ மழையானது மணப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அறிவிப்பு!

தென் தமிழகம் மற்றும் இலங்கை ஒட்டி தற்போது உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் இன்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்யும். இந்நிலையில் சென்னையில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. இன்றும் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here