Home news தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 – அரசுக்கு கோரிக்கை!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 – அரசுக்கு கோரிக்கை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 - அரசுக்கு கோரிக்கை!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.3,000 – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் பரிசுப்பணமாக ரூ.3,000 வழங்குமாறு தே.மு.தி.க கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய கோரிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

பொங்கல் பரிசு ரூ.3,000:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்ற பொங்கல் தொகுப்பு வழங்க தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, நெய் உள்ளிட்டவைகளுடன் மளிகை பொருட்கள் மற்றும் துணிப்பை அடங்கிய 20 பொருட்களுடன் முழுக்கரும்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அறிவிப்பு!

அதன்படி தமிழகத்தில் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கும் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கபட உள்ளது. கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புடன் பரிசுப்பணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்குதல் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்குமாறு தே.மு.தி.க கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் பொங்கல் பரிசு வழங்குதல் குறித்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது தே.மு.தி.க கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கோரிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here