டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியல் தெரிவிக்கிறது. அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு தங்களது சேவைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி விடுமுறை

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்களை அந்த ஆண்டின் துவக்கத்திலேயே அறிவிக்கும் இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI), தற்போது நடந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாதத்திற்கான விடுமுறைகளையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் பண்டிகைகள் நிறைந்த கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இம்மாதத்தில் குறைவான வங்கி விடுமுறைகள் இருக்கும் என தெரிகிறது. இப்போது, அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் டிசம்பரில் 12 நாட்கள் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை – இன்று காலை 11 மணிக்கு வெளியீடு!

இந்த மாதத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரே ஒரு தேசிய விடுமுறை மட்டுமே இருக்கிறது. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியாக மூடப்படும். இதனுடன் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீதமிருக்கும் விடுமுறை நாட்களின் பட்டியலில் மாநில வாரியாக ஏழு விடுமுறை நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை அளிக்கப்பட்டுள்ள விடுமுறைகளை சேர்க்கும் போது டிசம்பரில் வங்கி விடுமுறையின் மொத்த எண்ணிக்கை 12 ஆகும்.

இது தவிர இம்மாதத்தில் வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்கள், சனிக்கிழமை விடுமுறை நாட்கள், மாநில வாரியான கொண்டாட்டங்கள், மத விடுமுறைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள் நிமித்தமாகவும் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். அதனால் வங்கி தொடர்பான சில வேலைகளைச் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் இம்மாதத்திற்கான விடுமுறை நாட்களை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் முழுப் பட்டியலும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,

  • டிசம்பர் 3 – புனித பிரான்சிஸ் சேவியரின் விழாவை முன்னிட்டு கோவாவில் வங்கிகள் செயல்படாது.
  • டிசம்பர் 18 – யூ சோஸோதாமின் இறந்த நாளை முன்னிட்டு ஷில்லாங்கில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் ஈவை முன்னிட்டு ஐஸ்வால், ஷில்லாங் பகுதியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
  • டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஐஸ்வால் பகுதியில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • டிசம்பர் 30 – யு கியாங் நங்பாவை முன்னிட்டு ஷில்லாங்கில் வங்கிகள் செயல்படாது.
  • டிசம்பர் 31 – புத்தாண்டு ஈவை முன்னிட்டு ஐஸ்வாலில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களுக்கான வங்கி விடுமுறைகள்:
  • டிசம்பர் 5 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • டிசம்பர் 11 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
  • டிசம்பர் 12 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • டிசம்பர் 19 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • டிசம்பர் 25 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை.
  • டிசம்பர் 26 – ஞாயிறு, பொது விடுமுறை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!