TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை – இன்று காலை 11 மணிக்கு வெளியீடு!

0
TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை - இன்று காலை 11 மணிக்கு வெளியீடு!
TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை - இன்று காலை 11 மணிக்கு வெளியீடு!
TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை – இன்று காலை 11 மணிக்கு வெளியீடு!

2022ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்த இருக்கும் குரூப் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று (டிச.7) வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தமுடியாமல் போனது. அந்த வகையில் இந்த ஆண்டும் TNPSC தேர்வு கால அட்டவணையில் வெளியிடப்பட்ட தேர்வுகளில், 40க்கும் மேற்பட்ட தேர்வுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்து வந்ததையடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் – அரசாணை வெளியீடு!

ஆனால், TNPSC தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என்பது உட்பட தேர்வு முறையில் சில முக்கிய மாற்றங்களை அரசு ஏற்படுத்தி இருப்பதால் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதமிருக்கும் நிலையில், 2021ம் ஆண்டு TNPSC தேர்வு கால பட்டியலில் உள்ள தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகங்கள் தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தி கொண்ட இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!!

இதற்கு மத்தியில் அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), வரும் 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்புகளை இன்று (டிச.7) வெளியிட இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முக்கிய அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.7) காலை 11 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிற்பாடு, 2022ம் ஆண்டிற்கான TNPSC தேர்வுகால அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முழு விபரங்களை அறிய எங்கள் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!