Home news SBI வங்கியில் டூவீலர் லோன் – மாதம் ரூ.256 EMI, குறைந்த வட்டி விகிதம்! முழு விபரம் இதோ!

SBI வங்கியில் டூவீலர் லோன் – மாதம் ரூ.256 EMI, குறைந்த வட்டி விகிதம்! முழு விபரம் இதோ!

0
SBI வங்கியில் டூவீலர் லோன் – மாதம் ரூ.256 EMI, குறைந்த வட்டி விகிதம்! முழு விபரம் இதோ!
SBI வங்கியில் டூவீலர் லோன் - மாதம் ரூ.256 EMI, குறைந்த வட்டி விகிதம்! முழு விபரம் இதோ!
SBI வங்கியில் டூவீலர் லோன் – மாதம் ரூ.256 EMI, குறைந்த வட்டி விகிதம்! முழு விபரம் இதோ!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீங்கள் 3 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாகனக்கடன்:

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான திட்டங்களையும் அதில் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 4 லட்சம் வரை காப்பீடு பெறும் வாய்ப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு உண்டு. மேலும் யோஜனா ஆப் மூலம் எளிதாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் போன்ற வேலைகளை இந்த செயலி மூலம் செய்யலாம். தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் வசதிக்காக எஸ்பிஐ அவ்வப்போது புதிய குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா?

அந்த வகையில் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு செயலாக்க கட்டணம் இன்றி வீட்டு கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரியால்டி கோல்ட் லோன் ஸ்கீம் என்ற திட்டத்தின் மூலம் நகைகளை வைத்து ஒருவர் 50,000 முதல் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை வீட்டு கடன் பெற முடியும். எஸ்.பி.ஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருபவர்களுக்கு மட்டுமே இந்த ரியால்டி கோல்ட் லோன் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் – நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

அதனை தொடர்ந்து தற்போது புதிதாக இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி 3 லட்சம் வரை இரு சக்கர வாகன கடன் பெறலாம். இந்த தொகைக்கு 10.50% வட்டி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10000-க்கு ரூ. 256 மாத தவணையாக செலுத்தலாம். கடனை திரும்ப செலுத்த 48 மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பைக் அல்லது ஸ்கூட்டரின் ஆன்-ரோட் விலையில் 85% தொகையை கடனாக பெற்று கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே எஸ்பிஐயின் யோஜனா செயலி மூலம் எளிதாக கடன் பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here