Home news தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் – நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் – நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

1
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் – நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் - நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.33,000 கவுரவ ஊதியம் – நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களின் கடின உழைப்பை கௌரவிக்கும் விதமாக கவுரவ ஊதியம் வழங்க 159 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கவுரவ ஊதியம்:

நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கண்டு ஆட்சி அமைத்துள்ளது தி.மு.க அரசு. புதிதாக தலைமை ஏற்றதும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. இதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி முதலியன முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுரவ ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Reliance Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களின் கடின உழைப்பை கௌரவிக்கும் விதமாக கவுரவ ஊதியம் வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. அதற்காக 159 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அந்த தொகையில் இருந்து தேர்தல் பணிகள் மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியவர்களுக்கு தலா 33,000 ரூபாய் கவுரவ ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (நவ.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதேபோல் மாவட்ட வருவாய் அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்களுக்கு தலா ரூ.24,500 கவுரவ ஊதியம் வழங்கப்படும் என்றும் மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள், என தேர்தலில் பணியாற்றிய அனைவர்க்கும் கவுரவ ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பானது அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here