Reliance Jio வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்கள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜியோ:
முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் 1 வருடத்திற்கான திட்டங்கள் என பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறைந்த விலையில் அதிகமான டேட்டா வழங்கி வருவதன் மூலம் தனக்கென தனி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்காக சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வந்தது.
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரூ 329 திட்டம்:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 329 திட்டத்தை வழங்கி வருகிறது. 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 6GB டேட்டா வழங்குகிறது. மேலும் 1000 SMSகளும் வழங்குகிறது. அதனுடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
ரூ 555 திட்டம்:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 555 திட்டத்தை வழங்கி வருகிறது. 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வழங்குகிறது.
தமிழகத்தில் நாளை (நவ.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் தினசரி 100 SMSகளும் வழங்கப்படுகிறது. அதனுடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
ரூ 599 திட்டம்:
ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 599 திட்டத்தை வழங்கி வருகிறது. 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால் செய்யும் வசதியை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வழங்குகிறது. மேலும் தினசரி 100 SMS களும் வழங்கப்படுகிறது. அதனுடன் அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud பயன்பாடுகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.