முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 18

0

நிகழ்வுகள்

  • 1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு ரஷ்யருடனும் விண்வெளி சென்றது.
  • 1982 – லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
  • 1988 – பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
  • 1990 – லிக்டன்ஸ்டைன் நாடு ஐநாவில் இணைந்தது.
  • 1997 – 50.3 விழுக்காடு வேல்ஸ் மக்கள் சுயாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • 2006 – கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2007 – மியான்மாரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

இன்று உலக மூங்கில் தினம்

உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 18 – ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான 10 பில்லியன் டாலர் தொகையில் சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது.

மூங்கிலை பச்சைத் தங்கம் என்றும், ஏழைகளின் மரம் என்றும், வனவாசிகளின் வாழ்வதாரம் என்றும் அழைக்கபடுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்சைட் ) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராணவாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் மூங்கில் வளர்ப்பில்நம் நாட்டு மக்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது தான் உண்மை. மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை.

நம் நாட்டைப் பொறுத்தவரை, இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண உபயோகத்திற்குத் தான் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள் என்ற அளவில் சில முன்னேற்றம் உள்ளது.

பிறப்பு

அசுவினி பொன்னப்பா

அசுவினி பொன்னப்பா (Ashwini Ponnappa பிறப்பு செப்டம்பர் 18, 1989) ஒரு இந்தியஇறக்கை பந்தாட்ட வீரர். 2001ஆம் ஆண்டு இந்திய இளநிலை சாதனையாளர் போட்டியில் முதலாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டின் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தெற்காசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2010ஆம் ஆண்டு புதுதில்லியில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்களில் ஜ்வாலா குட்டாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் நிகழ்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

குடகு நாட்டைச் சேர்ந்த அசுவினி பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பிற்காக ஐதராபாத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார்.

சிறப்பு நாள்

  • எயிட்சு விழிப்புணர்வு நாள் (அமெரிக்கா)
  • உலக நீர் கண்காணிப்பு நாள்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!