தனது 2வது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால் – ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் இரண்டாவதாக பேட்மின்டன் வீராங்கனையான ஜுவாலா காட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது தல தீபாவளியை கொண்டாடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால்:
தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தற்போது சிறந்த கதை கொண்ட கதைகளில் மட்டும் நடித்து வரும் அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் 7 ஆண்டுகளாக அவரது திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளுடன் சென்றது. இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. அதற்கு காரணம் விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன், மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான ஜுவாலா காட்டாவை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
பேபி சாராவுடன் “பாக்கியலட்சுமி” சுசித்ரா எடுத்த புகைப்படம் – இணையத்தில் வைரல்!
ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் தனது மகன் ஆர்யனுடன் விவாகரத்திற்கு பின்னும் நல்ல உறவுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால், ஜுவாலா காட்டாவிற்கு இந்த ஆண்டு தல தீபாவளி ஆகும். அதை தனது மகன் ஆர்யனுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடி அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.