பேபி சாராவுடன் “பாக்கியலட்சுமி” சுசித்ரா எடுத்த புகைப்படம் – இணையத்தில் வைரல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியலில் ஒன்றான பாக்கியலட்சுமியில், பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. அவர் குழந்தை நட்சத்திரம் சாரா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டாப் 4 TRP ரேட்டிங்கில் இடம் பெற்றுள்ளது. இந்த சீரியலில் அம்மாவாக நடிக்கும் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒவ்வொரு இல்லத்தரசிகளின் உள்ளங்களை பிரதிபலிப்பது போல் நடித்து வருகிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு தான் சுசித்ராவின் சொந்த ஊர்.
‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
அங்கையே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார். உபேந்திரா அவர்களின் தங்கையாக எ (A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014ல் AL விஜய் இயக்கத்தில் சைவம் படத்தில் நடித்திருந்தார் சுசித்ரா. பிறகு 2019ல் வெளியான எஜமான என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுகிறாரா பரீனா? அடுத்தகட்ட கதைக்களம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இவர் 20க்கு மேற்பட்ட கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் சின்னத்ரைக்கு அறிமுகமானது கலைஞர் டிவியில் ராபர்ட் ராஜஸேகரன் இயக்கத்தில் 2008ல் ஒளிபரப்பான நாணல் தொடரில் தான். தமிழில் 2014ல் AL விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் உமா என்ற பெயரில் நடித்தார். அப்போது அதே படத்தில் குழந்தை நட்சத்திரமான சாரா உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.