Home Entertainment “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?

0
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? ரசிகர்கள் ஷாக்! உண்மை நிலவரம் என்ன?

விஜய் டிவி டாப் சீரியல்களில் ஒன்றான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரம் இல்லாத சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் அந்த சீரியலில் நடிக்கும் ஒரு கதாபாத்திரம் தான் முல்லை. முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் நடிக்கும் காலத்தில் கதிர் முல்லை காதல் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பேபி சாராவுடன் “பாக்கியலட்சுமி” சுசித்ரா எடுத்த புகைப்படம் – இணையத்தில் வைரல்!

அதன் பின் திடீரென அவர் இறந்து விட்டதால் அவரது கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா காவ்யா அறிவு மணி நடிக்கத் தொடங்கினார். விஜே சித்ராவை நினைவுபடுத்தாத வகையில் அவரது நடிப்பு இருந்தது. பல மாதங்களாக இவரை முல்லையாக ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள் அவரது நடிப்பு திறமை காரணமாக தற்போது முல்லையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவரும் அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

காரணம் அவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததால் அவரால் சீரியல் மற்றும் சினிமா இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் சீரியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் அடுத்த முல்லையாக எந்த நடிகை பொருந்துவார் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் தொடர்ந்து விஜய் டிவி பிரபலமான சீரியல்களின் கதாபாத்திரங்கள் மாற்றப்படுவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here