பாரதி கண்ணம்மாவை முந்திய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ – விஜய் டிவி சீரியல்களின் இந்த வார TRP ரேட்டிங்!
சீரியல்கள் மூலம் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வைத்திருக்கும் விஜய் டிவியில் இந்த வாரம் ஒளிபரப்பான சில கதைக்களங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அதிகபட்ச TRP ரேட்டிங் பெற்று முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
TRP ரேட்டிங்
ஒரு திரைக்கதையில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து நவரசங்களையும், டிவி சீரியலின் ஒரு எபிசோடு கொடுத்து விடுகிறது என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் எல்லாம் மக்களின் ரசனைக்குரிய ஒன்றாக மாறி இருக்கிறது. உதாரணமாக ஒரு டிவி சீரியலை எடுத்துக்கொண்டால் அதில் காட்டப்படும் சண்டை, காதல், மோதல், பிரிவு என அனைத்து நவரசங்களும் மிக அழகாக காட்சிப்படுத்தப்படுகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தீபாவளி கொண்டாட்டம் – வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்!
அதிலும் குறிப்பாக சினிமா பாணியை போல சில சீரியல்களின் சண்டை காட்சிகள் கூட மிக பிரமாண்டமாக உருவாக்கப்படுகிறது. இப்படி அனைத்து சீரியல்களையும் மக்கள் விரும்புவது போல கொடுத்து வரும் விஜய் டிவி சீரியல்கள் எப்போதும் தமிழ் சீரியல்களின் TRP ரேட்டிங் கிங்காக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து முதல் 9 இடங்களை பிடித்திருக்கும் சீரியல்களையும் அதன் TRP ரேட்டிங் குறித்தும் இப்பதிவில் காணலாம்.
- பாண்டியன் ஸ்டோர்ஸ் – 9.72
- பாரதி கண்ணம்மா – 9.25
- பாக்கியலட்சுமி – 9.02
- ராஜா ராணி 2 – 7.61
- தமிழும் சரஸ்வதியும் – 6.25
- மௌனராகம் 2 – 4.97
- நாம் இருவர் நமக்கு இருவர் – 4.10
- பிக்பாஸ் சீசன் 5 – 3.76
- காற்றுக்கென்ன வேலி – 3.45