![பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி கம்பம் மீனாவின் குடும்ப புகைப்படம் - லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்! பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி கம்பம் மீனாவின் குடும்ப புகைப்படம் - லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/ps.jpg)
பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி கம்பம் மீனாவின் குடும்ப புகைப்படம் – லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை கம்பம் மீனா தற்போது தனது மகள்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கம்பம் மீனா:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் என்றால் அது, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் தான். இந்த இரண்டு சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் தான் நடிகை கம்பம் மீனா. இவர் தனது எதார்த்த நடிப்பாலும், வட்டார வழக்கு பேச்சாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து இருக்கிறார். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” இல் வெளியேறும் 2வது போட்டியாளர் இவர்தான் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அந்த சீரியலில் அவ்வப்போது கவுண்டர் கொடுத்து, காமெடி செய்து கொண்டும் இருப்பார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கஸ்தூரியாக புகழ் பெற்றிருக்கும் இவரது உண்மையான பெயர் கம்பம் மீனா. தனது சிறு வயதில் இருந்தே அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்துள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் போதே இவருக்கு திருமணம் நடைபெற்று விட்டதாம். அதன் பிறகு 2 குழந்தைகளுக்கு தாயான இவர் எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 கேமராவின் விலை மட்டும் இத்தனை கோடி ரூபாய் – ஷாக் ரிப்போர்ட்!
தனது குடும்பத்தினை மிகவும் தைரியமாக பார்த்து கொண்ட இவர் தனது சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவராம். சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்ததும் அதனை நன்றாக பயன்படுத்தி கொண்டு தற்போது மிகவும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கம்பம் மீனாவிற்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? என்று ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைத்து வருகின்றனர்.