விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 கேமராவின் விலை மட்டும் இத்தனை கோடி ரூபாய் – ஷாக் ரிப்போர்ட்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 கேமராவின் விலை மட்டும் இத்தனை கோடி ரூபாய் - ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 கேமராவின் விலை மட்டும் இத்தனை கோடி ரூபாய் - ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 கேமராவின் விலை மட்டும் இத்தனை கோடி ரூபாய் – ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் கேமராக்களின் பண மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நான்கு சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுப்பாளராக இருக்கிறார்.

ஜூலி, வனிதா கலந்த கலவை அபிஷேக் – “பிக்பாஸ் சீசன் 5” இன்றைய எபிசோட்! 2வது ப்ரோமோ!

வழக்கம் போல 18 போட்டியாளர்களை அவர் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி முதல் நாள் அக்.3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதன் பின் முதல் வாரத்திலேயே திருநங்கை போட்டியாளர் வெளியேறினார். பின் நாமினேஷனில் இருந்து இரண்டாவதாக நாதியா சங் வெளியேறினார். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்த செட்டில் போட்டியாளர்கள் மிகவும் தந்திரமாக போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விஜய் டிவியின் “காமெடி ராஜா கலக்கல் ராணி” நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு – ரசிகர்கள் வருத்தம்!

இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எத்தனை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கான செலவு எவ்வளவு ஆகி உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வீட்டில் 60 கேமராக்கள் உள்ளன, ஒரு கேமராவின் விலை அமெரிக்க மதிப்பில் சுமார் 8000 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது, 60 கேமராவையும் சேர்த்து பிக்பாஸ் குழு கேமராவிற்கு மட்டும் ரூ.3.6 கோடி செலவு செய்துள்ளனர். Sony BRC-H900 வகை கொண்ட இந்த கேமராவின் மெகாபிக்சல் 2.7 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!